எது சிறந்தது? Wordpress Vs Blogger

- நீங்கள் பலதுறை பதிவுகளை எழுதுபவராக இருந்தால் நிச்சயம் வோர்ட்பிரஸ் மிகவும் விரும்பத்தக்கது. உதாரணத்திற்கு இங்கே க்ளிக்கினால் எனது இணயத்தளம் சார்ந்த பதிவுகளை மட்டும் நீங்கள் பார்க்களாம். இங்கே க்ளிக்கினால் எனது சமூகம் சார்ந்த பதிவுகளை மட்டும் நீங்கள் பார்க்களாம். அதாவது உங்கள் பதிவுகளை வகைப்படுத்தி வெளியிடவேண்டுமெனில் வோர்ட்பிரஸ் is my natural choice!
- Blogger மிகவும் எளிதாக நிறுவக்கூடியது. ஆனால் இப்பொழுது வோர்ட்பிரஸ் கூட இலவசமாக உங்கள் அக்கவுண்டை ஏற்படுத்தி தருகிறார்கள். இங்கே சென்று உங்கள் வோர்ட்பிரஸ் வலைப்பூவை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இதில் தமிழ்மணம் கருவிப்பட்டை அட்சென்ஸ் போன்றவற்றை நிறுவமுடியாது.
- அதே சமயம் வோர்ட்பிரஸ் ஆனது ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்! இதை உங்கள் சொந்த டொமைன்’ல் நிறுவிக்கொள்ளலாம். அப்படி நிறுவினால் உங்கள் இஷ்டப்படி அதை வளைக்கலாம்! நான் இந்தப்பூவை அப்படித்தான் நிறுவி உள்ளேன். இதற்காக வருடம் ரூ 1500 ( including domain and server space) செலவிட வேண்டி வரும்! ஆனால் வோர்ட்பிரஸ் என்பது ஒரு அற்பதமான கம்யூனிட்டி ஆகும். அற்புதமான வலைத்தள வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் வல்லுனர்களின் தீம்கள் மற்றும் ப்ளங்இன் கள் ஏராளம் ஏராளம்! அனைத்தும் இலவசம்!
- பொழுது போக்குக்காக எழுதுவது என்று முடிவெடுத்தால் நீங்கள் இரண்டையும் சீர்தூக்கி பார்த்து பின் ஏதாவது ஒன்றை நிரந்தரப் படுத்திக்கொள்ளலாம்!
மேலும் மொபைல் புகைப்பட வலைப்பூ (என்னுடையது இங்கே!)என்ற சமீபத்திய Trend உருவாகி வருகிறது. இதற்கு Blogger அற்புதமான வழி!
அதுசரி மேலே உள்ளவர்கள்: மலேசிய வலைபூவாலர்கள் சந்திப்பு ! அழகான பூக்கள்!
| 487 Views | ***EMail This Post | add this page to del.icio.us


மு.மயூரன் அவர்கள் எழுதியது:
செல்லா, சொந்த வழங்கி வைத்திருந்தாலேயொழிய வேர்ட்பிரஸ் சரிப்பட்டுவராது. பெரிய சுதந்திரம் ஒன்றும் தேவையில்லை. ஆகக்குறைந்தது வார்ப்புருவை வடிவமைக்கும் சுதந்திரத்தை மட்டுமே வழங்கினால்கூட வேர்ட்பிரஸ் மிகச்சிறந்த சேவையாக மாறிவிடும். அதுவரை பிளாக்கர்தான் முதல் தெரிவு.
(திறந்த மூல இயக்கத்துக்கு பலமான ஆதரவு வழங்குபவன் நான். இந்த கருத்தை திறந்த மூல மென்பொருள் ஒன்றுக்கு எதிராக மூடிய மென்பொருளை முன்னிறுத்தும் கருத்தாக எடுத்துக்கொள்ளவேண்டாம். வேட்பிரஸ் மென்பொருளுக்கு இணையில்லை. ஆனால் அவர்களது இலவச இடவசதி வழங்கலில் போதாமைகள் உள்ளன. அவ்வளவுதான். )
மற்றது செல்லா,
உங்கள் கருவிப்பட்டையின் வானொலி என் கணினியில் தெரிகிறதில்லை.
நான் ubuntu GNU/Linux 6.06, Firefox 1.5.0.7 பயன்படுத்துகிறேன்
மறு மொழிந்த தேதி 28-Sep-06 at 2:14 pm | நிரந்தரச் சுட்டி
மு.மயூரன் அவர்கள் எழுதியது:
இப்போதுதான் கவனித்தேன். மிகவும் பிரயோசனமான வசதி ஒன்று வேர்ட்பிரச் இல் இருக்கிறது. மட்டுறுத்தலுக்கு முன்பே என்னால் எனது பின்னூட்டத்தை பார்க்க்முடிகிறது.
இதுதான் திறந்தமூலம்.
வாழ்த்துக்கள்.
மறு மொழிந்த தேதி 28-Sep-06 at 2:16 pm | நிரந்தரச் சுட்டி
good girl அவர்கள் எழுதியது:
good work!this posting is informative and helpful.I hope to see more useful posting from you!
மறு மொழிந்த தேதி 28-Sep-06 at 2:50 pm | நிரந்தரச் சுட்டி