இணைய நாடோடி வலைப்பூ மூடப்பட்டு விட்டது!

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர்களே, தோழர்களே தோழியர்களே, நான் வலைப்பூ வந்ததே ஒரு சிறு விபத்து. நானோ ஒரு இணைய நாடோடி. இணைய உலகை சுற்றி வருபவன். சிறிதுகாலம் தமிழ் வலைப்பூவுலகம் பற்றி அறியவும் ஆசைப்பட்டு இங்கே வந்தேன். வெளியே இருந்து பார்ப்பது வேறு.. உள்ளே இருந்து அனுபவிப்பது வேறு. இரண்டும் நடந்துவிட்டது. அது மட்டுமா நண்பர் குழலி மூலம் ஒரு கைக்குழந்தயுடன் தவித்த ஆப்பிரிக்க சகோதரிக்கு ஒரு மாத செல்வுக்கு பணம் 24 மணிநேரத்தில் வலைப்பூ மூலம் அனுப்ப முடிந்ததும் நடந்தது!
நிறைய நண்பர்கள் லக்கி, ரவி, பாலபாரதி, Gilli Team, பொன்ஸ், குழலி, சுகுணா திவாகர், செல்வநாயகி, துர்கா (என்னமாய் இயல்பாய் எழுதுகிறாள் இந்த அறுந்த வாலு! ஆனால் தமிழ்மணம் தேன்கூடெல்லாம் வேண்டாம், நண்பர்களுக்காக மட்டும் என்று.. ஓவர் தன்னடகம் இந்த சுட்டிப்பெண்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இவர்களில் செல்வநாயகி தவிர அனைவருடனும் செல்பேசியில் பேசியும் உள்ளேன். ஹரிஹரன், டோண்டு போன்ற எதிர்கருத்து நண்பர்களையும் வலைப்பூவில் சந்திக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியே! ( நாடோடிகளுக்கு எதிர்கருத்து நண்பர்கள் தான் உண்டே ஒழிய எதிரிகள் என்று அவர்கள் யாரையும் நினைப்பதில்லை! ஒத்த கருத்து மட்டுமே இருந்தால் பேச என்ன இருக்கிறது!! )
சாகரன் அவர்களின் இழப்பும் என்னை பாதித்த தருணங்களில் ஒன்று. தேன் கூடைத் திட்டிய சில மணித்துளிகளில் சுடர் என் கையில். சுடர் என்னிடம் இருக்கையிலேயே அவர் இவ்வுலகை விட்டு நீங்கினார். நான் அவரைப்பற்றி ஒரு சிறு வரிமட்டும் சுடரில்எழுதினேன். மிகவும் மௌனமாய் இருந்த சில தருணங்கள் அவை.
மற்றபடி மாசிவா அவர்கள் என்னை சென் பக்கம் வாருங்கள் வாருங்கள் என்று அடிக்கடி சொல்லுவார். ஆம் அது ஒரு அற்புதங்களுக்கு எதிரான இயல்பு நிலை ஆன்மீக உலகம்! ஒரு வேளை நான் மீண்டும் இங்கு வந்தால் அவர் சொன்ன படி செல்லாவின் ஆன்மீகம், நகைச்சுவை கலந்த கிறுக்குத்தனத்தோடு தான் வருவேன்…. அரசியல், மொழி, போன்றவைக்கு அப்பால் ஒரு இயங்கு தளத்திலிருந்து! ஒருவேளை கடவுள் பற்றிய என் கேள்விகளுக்கு நானே அங்கு விடையளிக்கவும் நேரிடலாம்!
FLASH NEWS: நான் இப்பொழுது இங்கே தமிழில்எழுதுகிறேன்!
இணைய நாடோடி
“ஓசை” செல்லா (எ) swami jivan apthakam
+91 99946 22423
webmediaconsultant@yahoo.com
பிகு: கோவை வலைபதிவர் மாநாடு நிச்சயம் நடக்கும். அங்கு நிச்சயம் சந்திப்போம்!
| 2,346 Views | ***EMail This Post | add this page to del.icio.us


karthi அவர்கள் எழுதியது:
appo ini nimathi
மறு மொழிந்த தேதி 06-Mar-07 at 6:09 am | நிரந்தரச் சுட்டி
சென்ஷி அவர்கள் எழுதியது:
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருப்பது போல் உங்களுக்கும் இருக்கட்டும்
சென்ஷி
மறு மொழிந்த தேதி 07-Mar-07 at 4:07 am | நிரந்தரச் சுட்டி
Chola அவர்கள் எழுதியது:
mostly your blogs good except few, bye byee
மறு மொழிந்த தேதி 07-Mar-07 at 8:49 am | நிரந்தரச் சுட்டி