பெங்களூரில் நாய்கடித்து ஒரு சிறுவன் சாவு . மேனகா காந்தியின் நாய்க்காதல்


சற்று முன்தான் அப்பாவியின் இந்த பதிவைப்படிக்க நேர்ந்தது. மனம் கொதிக்கிறது.
கடந்த மாதம் தான் மேனகாவின் நாய்ப்பாசத்தால், காரில் போகும் மேட்டுக்குடி ஆர்வலர்களால் நமது குழந்தகளின் உயிர்கள் பணயம் வைக்கப்படும் என்றுஎழுதியிருந்தேன். இந்த செய்தியைப் படித்து PFA வின் செயலர் ஒருத்தரை போஒனில் பிடித்து கேட்டால் அந்த நாய் காதல் மரமண்டை சொல்கிறது மனிதர்கள் கூடத்தான் கொலை செய்கிறார்கள்.. ஒரு பி பி பெண்கூடத்தான் கொலைசெய்யப்பட்டாள்… காரணம் நாய்கள் இல்லை என்று விட்டாத்திதனமாக பதில் சொல்லியது,,,,எம் சேரிக்குழந்தைகளின் உயிரோடு விளையாடும் மேனகா காந்திகளைக் காரித்துப்பத்தான் வேண்டும்… இதோ எனது கட்டுரை… என்ன செய்யவேண்டும் என்று புரிகிறதா பாருங்கள்…

=====================

ஊட்டியிலிருந்து வந்த நண்பர், ஒரு விசயத்தை சொன்னார். அங்கு மக்களுக்கும் மிருகவதை ஆர்வலர்களுக்கும் ஒரு பனிப் போர் நடப்பதாகக் கூறினார். காரணம் நாய்கள். நீலகிரியில் ஒரு மாணவனை ஒரு மாதத்திற்கு தெரு நாய்கள் 68 இடங்களில் தையல் போடுமளவிற்கு கடித்து குதறின. நிர்வாகம் தெரு நாய்களை வேட்டையாட சட்டத்தை காண்பித்து கைவிரித்தது. மக்கள் ஆவேசம் அடைந்து வேறு உத்திகளை கையாள ஆரம்பித்து விட்டனர். ஆடு / மாடு குடலில் பேகான்எனும் விசம் வைத்து அவற்றை ரோட்டில் ஆங்காங்கு வீசிவிட்டு சென்றனர். நிறைய தெரு நாய்கள் கொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் அவர்கள் கோபம் தணியவில்லை. .. இதனிடையே ஒரு PETA வோ PFA வோ …ஏதோ ஒரு அமைப்பைச் சார்ந்த பெண்மனி ஹைகோர்ட்டில் இதைக் கட்டுப்படுத்தச் சொல்லியும் நாய் வேட்டைக்குஎதிர்ப்புத் தெரிவித்தும் வழக்குத் தொடர்ந்துள்ளது உள்ளூர் மக்களை எரிச்சலடையச் செய்திருக்கிறது.
அதில் ஒரு பெண்மனி “எங்கள் குழந்தைகளை காக்க இவர்களுக்கு ( மிருகவதை தடுப்பு ஆர்வலர்கள் ) அக்கறையில்லை. நாய்கள் மீதுதான் பாசம்! காரில் ஊர்சுற்றும் இந்த டாம்பீகப் மினுக்கிகளுக்கு ரோட்டோரம் வாழும், விளையாடும் குழந்தைகளின் மரணபயம், ஆபத்து எங்கே புரியப் போகிறது. அழகுக்கு நாய் வளர்த்தும் இவர்களின் பாசம் ஒரு வேசம்” என்று பொரிந்து தள்ளினார். நானும் ஒரு வதை தடுப்பு ஆர்வலனாக இருந்தாலும் அவர்களின் வாதம் மிக மிக ஞாயமாகப் பட்டது! காரில் ஊர்சுற்றும் இந்த டாம்பீகப் மினுக்கிகளுக்கு ரோட்டோரம் வாழும், விளையாடும் குழந்தைகளின் மரணபயம், ஆபத்து எங்கே புரியப் போகிறது?

என்கருத்தும் இதேதான். வேண்டுமானால் தெரு நாய்களை மின்சார சாக் கொடுத்து வலியில்லாமல் கொல்லலாம் அல்லது இந்த PETA பெண்களிடம் சொல்லி அத்தனை நாய்களையும் ஆளுக்கு நூறு என்ற விகிதத்தில் தத்துக் கொடுத்துவிடலாம்!! எங்கள் ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாட வேண்டாம்!

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 1 Views | ***EMail This Post | add this page to del.icio.us

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

பெங்களூரில் நாய்கடித்து ஒரு சிறுவன் சாவு . மேனகா காந்தியின் நாய்க்காதல்

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1227219445')