கவிஞர் புவியரசு அலுவலகம் வருகை மற்றும் நான் உருவாக்கிய தளம்: ஜனாதிபதி இன்று திறப்பு..


puviyarasu.jpg

மிகச்சிறந்தஎழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன கவிஞர் புவியரசு இன்று என் அலுவலகம் வந்து என்னைப் பெருமைப்படுத்தினார். கமல் அவர்களின் நெருங்கிய நண்பர். கலீல் கிப்ரானின் படைப்புகள், ஓஷோவின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை தமிழில் வழங்கியவர் இவர். “வானம்பாடி” களின் முன்னோடி என்று இலக்கிய வட்டங்களில் பிரபலமானவர். எனது சிலவரிகளை படித்து பாராட்டி சென்றார். குறிப்பாக பாலியல் தொழிலாளர்களைப் பற்றிய எனது வரிகள் ” இரவில் தீண்டியும் பகலில் தீண்டத்தகாதவர்களாக்கியும் சமுதாயம் தனது போலி முகங்களையே இவர்களுக்கு காட்டி வருகிறது” போன்றவைகள் தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னார். மகிழ்ச்சி.

மேலும் இன்று நான் மற்றும் நண்பர் திரு டாக்டர் ரமணி இணைந்து உருவாக்கிய மகாகவி பாரதி பற்றிய இணையத் தளத்தை இந்திய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் நாட்டு மக்களுக்காக துவக்கிவைக்கிறார்! எனது பணிகள் தொடரும்… உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடும்…

அன்புடன்…
ஓசை செல்லா

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 926 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (6) left to “கவிஞர் புவியரசு அலுவலகம் வருகை மற்றும் நான் உருவாக்கிய தளம்: ஜனாதிபதி இன்று திறப்பு..”

  1. செல்லா அவர்கள் எழுதியது:

    மேலே அவருக்கு தமிழ்மணத்தையும் தேன்கூட்டையும் கணிணியில் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது எடுத்த படம்.

  2. மாசிலா அவர்கள் எழுதியது:

    //இரவில் தீண்டியும் பகலில் தீண்டத்தகாதவர்களாக்கியும் சமுதாயம் தனது போலி முகங்களையே இவர்களுக்கு காட்டி வருகிறது//
    சமுதாய அக்கறை உள்ள ஒவ்வொருவனையும் நின்று, திரும்பி, யோசிக்க வைக்கும் வரிதான் இது.

    ‘உன்னுடைய நண்பர்கள் யாரென்று சொல், நீ யாரென்று நான் சொல்கிறேன்’. நமது முகம் மற்றவர்களால் வடிவமைக்க படுவதே. கவிஞர் புவியரசு உங்களை செதுக்கி கொண்டிருக்கிறார். பண்பாளர்களை மதிப்போம், போற்றுவோம்.
    மாசிலா.

  3. Ram அவர்கள் எழுதியது:

    வாழ்த்துக்கள்…

  4. ☆சிந்தாநதி அவர்கள் எழுதியது:

    அப்துல்காலாம் துவக்கி வைக்க இருக்கும் இணைய தள முகவரி?

  5. அருட்பெருங்கோ அவர்கள் எழுதியது:

    வாழ்த்துக்கள் செல்லா!!!

  6. opparee அவர்கள் எழுதியது:

    congrats chella. thanks for ur comments in surveysan’s photo contest. take a look at original pictures at my blog.

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

கவிஞர் புவியரசு அலுவலகம் வருகை மற்றும் நான் உருவாக்கிய தளம்: ஜனாதிபதி இன்று திறப்பு..

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231326810')