எனது கன்னிப் பதிவு !
நல்வரவு! என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் ஒரு இணய நாடோடி… எங்காவது ஓடிக்கொண்டே இருப்பவன். இணையம் அனைவரையும் சென்று அடையவேண்டும் என்பதற்காக கடந்த 1999 முதல் பல்வேறு முயற்சிகளை இணையம், மின்னஞ்சல் குழுமங்கள், வலைப் பூக்கள், விரிவுரை மூலமாக ஓயாமல் செய்து கொண்டு வருகிறேன்.
“ஓசை ” மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை வாரம் இரு முறை சென்றடைகிறேன். இணையத்தில்எழுத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல் ஒலி மற்றும் ஒளியும் உலாவரவேண்டும், மற்றும்எழுதப் படிக்க இயலாத எம் தமிழர்களும் இணையம் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அவாவினால் இந்த ஓசை நிகழ்ச்சியை ஆரம்பித்து, தமிழ் இணையம் மூலம் தொகுத்து வழங்கி வருகிறேன்.
என்னை உருவாக்கியவர்கள்
ஒரு மனிதனை உருவாக்குவதில் பலருக்கும் பங்கு உண்டு. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் புத்தகங்கள் என்று பலர்… அவர்களில் சிலர்
- தமிழூட்டி வளர்த்த என் தந்தை (நினைவில் வாழும்) திரு.சின்னதுரை சிவசாமி கிருட்டிணன்
என் தமிழாசான் கீரனூர் சுந்தர வடிவனார்- வான்புகழ் வள்ளுவனார்
- தொல்காப்பியப் பெருந்தகை
- அறிஞர் அண்ணா
- பட்டுக்கோட்டையார்
- கவிஞர் கண்ணதாசன்
- செயகாந்தன்
- கவிப்பேரரசு வைரமுத்து
- நகைச்சுவை தென்றல் ஆசான் லியோனி
மாக்சிம் கார்க்கி- கியூபச் சிங்கங்கள் சேகுவாரா, பிடல் & ரால்
- பாட்ரிசு லுமும்பா
- பாப்லோ நெரூடா
- ஓஷோ
… தொடரும்
இந்த வலைப் பூ மூலம் தமிழ் எழுத்துலகிலும் அடியெடுத்து வைக்கிறேன். இந்த முயற்சிக்கு வித்திட்ட திரு ராகவன் அவர்களுக்கும், ஆசி வழங்கிய என் அன்னைக்கும், என் நன்றியை உரித்தாக்குகிறேன். பயணம் தொடரும் …
| 1,537 Views | ***EMail This Post | add this page to del.icio.us


ரம்யா அவர்கள் எழுதியது:
அருமயிலும் அருமை. நான் பார்த்ததிலேயே அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்ட வலைப்பூ உங்களுடையது தான்! செல்லா அவர்களே உங்கள் அயராத முயற்சிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்
“சிங்கை” ரம்யா
மறு மொழிந்த தேதி 31-Aug-06 at 3:36 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
மிக்க நன்றி தோழி ! தொடரும் என் பயணம் … தங்கள் ஆசிகளுடன்
மறு மொழிந்த தேதி 31-Aug-06 at 4:17 pm | நிரந்தரச் சுட்டி
டோண்டு ராகவன் அவர்கள் எழுதியது:
நான் கூறியதற்கு மதிப்பளித்து செயலாற்றியதற்கு மிக்க நன்றி. உங்களுக்கு எனது ஆசிகள் எப்போதும் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மறு மொழிந்த தேதி 31-Aug-06 at 4:28 pm | நிரந்தரச் சுட்டி
மா சிவகுமார் அவர்கள் எழுதியது:
செல்லா,
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
மறு மொழிந்த தேதி 01-Sep-06 at 1:37 am | நிரந்தரச் சுட்டி
Ananthakrishnan அவர்கள் எழுதியது:
Dear Chella
A friend of mine sent this link.
A wonderful effort
My best wishes to you in your endeavour
Looking forward to reading more and more info
With warm regards
Ananth
மறு மொழிந்த தேதி 01-Sep-06 at 10:22 am | நிரந்தரச் சுட்டி
செந்தழல் ரவி அவர்கள் எழுதியது:
வாங்க செல்லா….வாழ்த்தி வரவேற்க்கிறேன்.
மறு மொழிந்த தேதி 11-Sep-06 at 2:07 pm | நிரந்தரச் சுட்டி
M.ABDUL KHADER அவர்கள் எழுதியது:
chella,
very nice, proceed..expecting more from u.
warmest regards,
M.A.KHADER/DAMMAM/SAUDI ARABIA
மறு மொழிந்த தேதி 16-Nov-06 at 5:15 pm | நிரந்தரச் சுட்டி