செல்லாவும் கடவுளும் ….

- கடவுள் உண்டா இல்லையா? …. முதலில் கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார் என்று சொன்னால் தானே நாம் கேள்வியை முதலில் புரிந்து கொள்ள முடியும்? பராகாபசம் உண்டா இல்லையா ? என்று கேட்டால் உங்கள் நிலை நான் மேல் சொன்ன மாதிரியான எண்ணச் சூழலைத் தானே உங்களிடம் உருவாக்கும்! பராகாபசம்என்றால் முதலில் என்ன என்று சொல் பின் பதில் சொல்கிறேன்” என்றுதானே கேட்பீர்கள். எனவே முதலில் கடவுள் என்று யாரைக் கூறுகிறீர்கள் ? ஒருவேளை அவர் முக்காலம் உணர்ந்தவர் என்பது உங்கள் பதிலாக இருக்குமானால் …. தொடர்ந்து படியுங்கள்!
- திருவிளையாடல்கள்: “மக்களை சோதிப்பது மற்றும் சோதனைக்கு உள்ளாக்குவது இதில்எல்லாம் சிறந்தவர் நீங்கள் தான்” என்று பரம சிவனைப் பார்த்து படத்தில் கேட்பார் பார்வதி! முக்காலத்தையும் அறிந்த சிவனுக்கு சோதனை ஏன் தேவைப் படுகிறது? சந்தேகம் தானே சோதனைகளின் தாய்! அப்படியானால் அவருக்கு முக்கா(லு) லம் தெரியாதா முழுவதும் தெரியாதா? இந்த லட்சனத்தில் “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் … ஆன கைவிட மாட்டான் …என்று வெட்டிச் சவடால்கள் வேறு. உன்னை மாதிரி வெங்காயங்களை சோதித்துதான் அறியும் நிலைமை / கொடுமை ஆண்டவனுக்கு ஏன் ஏற்பட்டது?
- படைப்புத் தத்துவம்: மேலே சொன்னவாறே அனைத்தயும் அறிந்த கடவுள்களுக்கு, மக்கள் அவர் ( சிவா,ஏசு, அல்லா) பெயரால் அடித்துக் கொண்டு சாவார்கள்என்ற விசயம் தெரிந்தே தான் இவ்வுலகைப் படைத்தாரா? என்ன அவசரம் அவருக்கு! மானுடமே ஒரு குறைப்பிரசவமா?
- “கடவுள் இல்லைஎன்பதும் ஒரு நம்பிக்கை” … ஆகா! உண்மைக்கும் நம்பிக்கைக்கும்எவ்வளவு வேறுபாடு தெரியுமா? உங்களுக்கு “இரண்டு கைகள, நம்பு ” என்று யாராவது உங்களிடம் சொன்னால் “நம்புவீர்களா?” இல்லை “அதை நம்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது”,என்ன ஆச்சு இவனுக்கு என்று யோசிப்பீர்களா. இருப்பதை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை(!) ஏன் நம்பச் சொல்கிறார்கள்? அதன் அவசியம்என்ன! சிந்தனை செய் மனமே!
- ஆனானப் பட்ட கடவுளே தனது பக்தனின் அன்பு உண்மைதானா என்று சோதனை செய்து கண்டுபிடிக்கிறார் .. இது சரியென்றால் குறைகளுள்ள மனிதன் சோதிக்காமல் எப்படி அறிய முடியும்? இது கூடத் தெரியாத அல்லது புரியாத ஒரு மகாசக்தியா கடவுள்? தன் பக்தனையே நம்பாத கடவுள் தன்னை சாதாரண மனிதர்கள் நம்ப வேண்டும் என்று சொல்வது .. அவரது மரியாதையைக் குறைக்கும் செயலல்லவா!?
- சர்வ வல்லமை படைத்த அவர் சாத்தானை அழித்தொழிக்க நேரடியாக முயலாமல் ஒரு சாதாரணமான… எந்த சக்தியும் இல்லாத என்னிடம் ” எப்படி சாத்தானை சமாளிப்பது” என்ற புத்தகத்தை ஏன் கொடுக்கிறார்?! போராளியாயிருக்க வேண்டியவர் … புத்தகாசிரியர் ஆன கொடுமை ஏன் நிகழ்ந்தது! ????
இவய் அனைத்தும் ஆசிரமங்கள் ஆசிரமங்களாக நான் பயணித்த போது எனக்குள் ஏற்பட்ட கேள்விகள். தெரிந்தவர்கள் கூறவும்.
( பின் குறிப்பு: நான் சாமீபத்தில் படித்த அழகான ஒரு ஒப்பீடு! )
| 839 Views | ***EMail This Post | add this page to del.icio.us


ஞானவெட்டியான் அவர்கள் எழுதியது:
அப்பப்பா!
வினாக்களுக்கு விடையிறுப்பது ஆ! சிரமம்.
மறு மொழிந்த தேதி 28-Jan-07 at 4:12 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
ஐயா ஞானவெட்டியான் அவர்களே! நாம் பேசாவிட்டாலும் நீங்கள் யார் என்று எனக்கு தெரியும்! பார்ப்போம் மற்றவர்களை!!
மறு மொழிந்த தேதி 29-Jan-07 at 4:10 am | நிரந்தரச் சுட்டி
கரு.மூர்த்தி அவர்கள் எழுதியது:
அது ஒன்னும் மேட்டரே இல்லீங்க , இந்து கடவுள் பொய் , ஆனா கிருத்துவ கடவுள் உண்மை , அவ்வளவுதான் மேட்டரு . இதை போய் எங்ககிட்ட கேட்டுகிட்டு .
கரு.மூர்த்தி
மறு மொழிந்த தேதி 29-Jan-07 at 1:55 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
கரு. மூர்த்தி: அரைகுறையாகப் படித்துவிட்டு பின்னூட்டமிடவேண்டாம்!
மறு மொழிந்த தேதி 29-Jan-07 at 2:58 pm | நிரந்தரச் சுட்டி
Muthiah அவர்கள் எழுதியது:
¾¢Õ ¦ºøÄ¡ «Å÷¸§Ç ¬ñ¼Åý ÁÉ¢¾÷¸¨Ç §º¡¾¨É ¦ºöÅÐ ÀñÒûÇÅ÷¸Ç¡¸ Á¡üÚžü¸¡¸§Å ¾Å¢Ã ¿õ ¾Ì¾¢¨Â «È¢óÐ ¦¸¡ûžü¸¡¸ «øÄ. §ÁÖõ ¯Ä¸ Å¡ú¨Å ¾Å¢Ã×õ þó¾ §º¡¾¨É¸Ç ¾¡ñÊÉ¡ø º¢ÈôÀ¡É Å¡ú× ÁÚÀ¢ÈÅ¢§Â¡ ÁÚ¨Á§Â¡ ¯ñÎ ±ýÚ ¿õÀ×õ þÐ §¾¨ÅÀθ¢ÈÐ.
மறு மொழிந்த தேதி 30-Jan-07 at 10:41 am | நிரந்தரச் சுட்டி
Muthiah அவர்கள் எழுதியது:
திரு செல்லா அவர்களே ஆண்டவன் மனிதர்களை சோதனை செய்வது பண்புள்ளவர்களாக மாற்றுவதற்காகவே தவிர நம் தகுதியை அறிந்து கொள்வதற்காக அல்ல. மேலும் உலக வாழ்வை தவிரவும் இந்த சோதனைகள தாண்டினால் சிறப்பான வாழ்வு மறுபிறவியோ மறுமையோ உண்டு என்று நம்பவும் இது தேவைபடுகிறது….
மறு மொழிந்த தேதி 31-Jan-07 at 9:24 am | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
Muthiah …
பண்புள்ளவர்களாக மாற்ற அவருக்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்? அவரது சக்தியை மனதில் கொண்டு சிந்திக்கவும்!
மறு மொழிந்த தேதி 31-Jan-07 at 10:14 am | நிரந்தரச் சுட்டி
Muthiah அவர்கள் எழுதியது:
அவரது சக்தியை மனதில் கொண்டு சிந்திக்கவும்
மறு மொழிந்த தேதி 31-Jan-07 at 11:10 am | நிரந்தரச் சுட்டி
Muthiah அவர்கள் எழுதியது:
thiru chellaa neengaL meikandaarin sivaGnaanaBoadham noolai ithuvarai padikkaathu irundhaal padiththu paarkkavum athil neengaL thEdum bathilkaL uLLana.
மறு மொழிந்த தேதி 31-Jan-07 at 11:30 am | நிரந்தரச் சுட்டி