அனர்த்தமுள்ள இந்த மதம் - பாகம் 2

பாகம் ஒன்றுக்கு ஒரு மாற்றுக்கருத்து கூட வரவில்லை!! சரி தொடர்கிறேன். முதலில் இந்து மதம் என்ற ஒரு மாபெரும் மதம் இருப்பதாக சொல்வதென்பது ஒரு மாபெரும் கட்டுக்கதை என்ற முடிவுக்கு நாம் வரலாம். சைவம், சாக்தம், வைணவம், சார்வாகம், தாந்திரம், சித்த மதம் போன்றவைகளின் குழுத்தன்மையை குறிக்கும் ஒரு இடம் சார்ந்த சொல்லே இந்து மதம் எனப்படும் அயல்நாட்டினர் வைத்த பெயர். அப்படிப்பார்த்தால் ஆப்பிரிக்க மதங்கள், தென்னமெரிக்க மதங்கள்என்பன போன்று பலவேறு சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த பல்வேறு மதங்களின் குழுப் பெயரே இது என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் அப்படி ஒத்துக்கொள்ள விடுமா இந்த மடச்சாம்பிராணிகள்? அவர்கள் சொல்லும் வாதம் வேதம்!! அதாவது வேத மதம்! வைதீக மதம்! சனாதன (அ)தர்மம்! eternal religion! vedic religion!
அப்படியென்றால் வேதங்களின் வழி நடக்கின்ற மக்கள் தான் சானாதனிகள்! அதாவது நம்மை அயலான் அழைத்த வார்த்தைகளில் சொல்வதானால் “இந்து மதம்”!
முதலில் சனாதனம்!எந்தக்காலத்திலும் இருந்து வந்த மதம். அதாவது பாக்டீரியாக்கள், கிளாமிடா மோனாஸ்கள் கூட இந்த மதம் தான்! சரி இப்படிப்பார்த்தால் அனைத்து மதங்களின் படைப்புத்தன்மையே குப்பைதான்! டார்வினின் வாதம் இவர்களுக்கு மரண சாசனம்!
இந்த வைதிக மதத்தின் பல்வேறு கிளைகள் இருந்தாலும் வேதத்தை சப்தப் பிராமனாக ஏற்றுக் கொள்வது என்று ஒரு பொதுக்கருத்து இவர்களில் நிலவுகிறது! வேதங்கள்,அவற்றின் இறுதிப் பாகங்களான வேதாந்தங்கள், சுருக்கு வழிகளான சூத்திரங்கள், வேதங்களின் விளக்கமும், மக்களின் வரலாறுகளான புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் என்று ஒரு மிகப்பெரிய குப்பைக்கடலே இவர்களிடம் இருந்து வந்திருக்கிறது! மேலும் நம் நாட்டை ஒரு பிச்சைக்காரர்களின் கும்பலாகவும், சுரண்டுபவர்களின் கூடாரங்களாகவும், பாதிக்கும் மேற்பட்ட மக்களை கேவலப்படுத்துவதாகவும் மாற்றியதில் இந்த மதக் கேவலத்தின் பங்கு என்ன என்று அடுத்த பதிவில் தோலுரிக்கிறேன்! — தொடரும்
பி.கு: இன்று நான் படித்த சுகுணா திவாகரின் வரிகள்… ( ஹரிஹரன் தற்கொலை செய்யாமல் இருக்க அவரது ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்! )
“இந்து மதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம்:பெண்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிகழ்வு நாட்களில் உடல் உபாதை கூடியிருக்கும் பெண்களில் பலருக்கு தாளமுடியாத வலி என்று சரியாக உட்காரக்கூட முடியாமல் வலியால் துடிப்பது என்பது சாதாரணமான பொதுஅறிவுடைய வெகுதியானவர்கள் அறிந்த உண்மை.கோவில்களில் கருவறையில் இறைவனைப் பூஜிக்கின்ற செயல் என்பது ஆறுகால பூஜை என்கிற இடைவிடாது நின்ற நிலையிலேயே இறைவன் உருவச்சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் என்கிற குனிந்து நிமிர்ந்து செய்யும் செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயம் உடையது.மேற்படியாக கடுமையான வலியில் இந்தக் காலகட்டத்தில் அவதியுறும் பெண்கள் குழந்தைகள், கணவன், குடும்பத்தார் மீதே எரிந்து விழுந்து, பொறுமையிழந்தவர்களாய் கிட்டத்தட்ட “ஸ்பிலிட் பெர்சனாலிட்டி” நபர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள்.மேலும் பண்டைய காலத்தில் இந்துக் கோவிலில் இறைவனுக்குச் சேவை செய்தபடியே வேதம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள், அந்தந்த ஊர் வழக்குகளில் நீதியும் சொல்லியிருந்து இருக்கின்றார்கள்.நீதி சொல்லும் நபர் நிதானத்துடன் நியாய அநியாயம் உணர்ந்து சொல்லவேண்டியது கடமை ஆதலால், உடல் உபாதை, வலி காரணமாக மாதத்தில் சில நாள் நிதானம் இழக்கும் பெண்கள் ஆலய அர்ச்சகர்களாக இந்தப் பணிக்கு உகந்தவர்களாக கருதப்படாததில் சமூக அக்கறையே பிரதானம்.”
ஹரிஹரனின் இந்த சமீபத்திய பதிவைப் படித்தபோது பிரபுதேவா நடித்த ஒரு படத்தின் நகைச்சுவைக்காட்சிதான் நினைவுக்கு வந்தது.
விவேக்கும் வடிவேலுவும் ஒரே பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்வார்கள். விவேக் கையில்லாதவரைப் போல நடித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை விவேக்கு அண்டர்வேர் மாட்டமுடியாது. அவரது காதலி மாட்டிவிட்டு விட்டு கைகளைத் தட்டிக்கொள்வார். விவேக் சொல்வார், “ஒரு லோடு மண்ணடிச்சமாதிரி கையைத் தட்டுறா பாரு”
ஏதோ மணியாட்டுவதும், தீபாராதனையும் உலகமகா உழைப்புப்போலவும் அதற்கு மாதவிடாய்தான் தடையாக இருப்பதுபோலவும் ஹரி பேசும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
ஹரி, நீங்கள் மாதவிடாய்க்காலங்களிலும் கொளுத்தும் வெயிலில் பட்டப்பகலில் வயல்வெளியில் ‘பால்சுரந்த தனமிரண்டைப் பயிர்வருடத் தலைகுனிந்தே மகவு உறிஞ்சுதுன்னு மண்ணுறிஞ்சக் களையெடுக்கும்’ உழைக்கும் பெண்களைக் கண்டதிலலையா? கல் சுமக்கும், ரோட்டோரங்களில் மதியவெயிலில் சாப்பாட்டுக்கடை போடும் சகோதரிகளைப் பார்த்ததிலலையா? அல்லது அவர்களுக்கெல்லாம் மாதவிடாய் வராது என்ற எண்ணமா?
ஒருவேளை நீங்கள் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் உழைக்கும் பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். பார்ப்பனச் சகோதரிகள் மாதவிடாய்க் காலங்களில் குனிந்து வளைந்து கோலம் போடுவதிலலையா? வீடு பெருக்குவதில்லையா? துணி துவைப்பதில்லையா? பாத்திரம் கழுவுவதில்லையா? ஆம்பளைகள் வக்கணையாய் வழித்துத் தின்ன வடித்துக்கொட்டுவதில்லையா?(என்ன, புணர்ச்சி இயந்திரமாகச் செயல்படுவதிலிருந்து மூன்றுநாட்கள் ஓய்வு கிடைக்கலாம்). அல்லது நீங்கள் சொல்வதைப் போல அவர்கள் ‘ஸ்பிளிட் பெர்சனாலிட்டி’ வந்து பார்ப்பன ஆண்களைக் கொலைசெய்துவிட்டார்களா?
சாதியையும் தாண்டி நீங்கள் ஆண் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.
முதலில் ‘உடலைக்கொண்டாடிய பெரியார்’ என்ற எனது பதிவில்தான் பின்னூட்டத்தில் இந்த அரிய ‘அறிவியல் கருத்துக்களை வெளியிட்டீர்கள்’. நான் பெண்கள் அர்ச்சகர்களாவதைப் பற்றிக்கூட பேசவில்லை, பெண்கள் அந்த மா.வி.காலங்களில் கோயிலுக்குச் செல்லாதது ஏன் என்றே கேட்டிருந்தேன். ஒருவேளை சாமி சிலை முன்னால் கையெடுத்துக் கும்பிடுவதும் மாபெரும் உழைப்பு என்று கருதுகிறீர்களா?
அதென்ன நிதானம் தவறிப் பெண்கள் நீதி சொல்வார்கள்? நிதானத்தோடு ஆண்கள் சொன்ன நீதிகள் எல்லாம் பெண்களுக்கு அநீதிகளாகத்தானே இருந்தன.
எங்கள் ஊர்ப்பக்கம் மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் ஊறுகாய்ப்பாட்டிலைக்கூட தொடமாட்டார்கள். ஊறுகாய் கெட்டுவிடும் என்பது நம்பிக்கை. இது தீட்டு, அசிங்கம் என்னும் தூய்மைவாத உளவியல் பெண்களிடம் ஆழக் கட்டப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக ஆண்களால் மாதவிடாய், பிரசவம் என்னும் உடல் உபாதைகளை உணரமுடியாது. அதை மிகுந்த பொறுப்போடும் புரிந்துணர்வோடும், மானுட நேசத்தோடும்தான் அணுகவேண்டும். ‘நீ பலவீனமானவள், எனவே கீழிறக்கப்பட வேண்டியவள்’ என்னும் அதிகார மனோபாவத்தோடு அல்ல.
இவ்வளவு சொல்லியும் நீங்களோ உங்கள் அரங்கநாதரோ, சிதம்பரம் நடராஜரோ முடியாது, கிடியாது என்றால் ரொம்பவே சங்கடப்பட்டால், வேண்டாம் பெண்கள் அர்ச்சகராகவே வேண்டாம்.
மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்
கேள்வி 1 : பகுத்தறிவின் துணைகொண்டு உண்மையை விடுதலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஹரிஹரன் குறைந்தபட்ச அறிவையும் பலசந்தர்ப்பங்களில் தன்னிலிருந்து விடுதலை செய்துவிடுகிறார்.
சார்வாகத்தை இந்துமதம் உட்செரித்துக்கொண்டது பரிணாமமாம். அப்படியானால் வேத நெறிகளுக்குப் பின் தோன்றிய ஆசிர்வகம், சாங்கியம், லோகாயுதம், பவுத்தம், சமணத்தை என்ன சொல்வீர்கள்? அது பரிணாம வளர்ச்சி என்றால் தஞ்சாவூரில் ‘கோலம் போடும் பெருமைமிகு’ இந்து மரபை உதறித்தள்ளிவிட்டு இஸ்லாம் கொடிகட்டிப் பறந்தால் அதுமட்டும் பரிணாமம் ஆகாதோ?
கேள்வி 2 : கால்கள்தான் இறைவனின் படைப்பில் உயர்ந்ததாம், பெருமாளின் பாதம்தான் சேவிக்கபப்டுகிறதாம். எனவே சூத்திரர்கள் காலில் பிறந்தது இழிவாகாதாம். நல்லது. அப்படியானால் அத்தகைய சேவிக்கத்தக்க உயர்ந்த பாதங்களில் அணிந்திருக்கும் செருப்பு தைக்க பார்ப்பனர்கள் தயாரா? (மேலும் பகவான ராமபிரானின் செருப்பு ஆண்ட புண்னிய பூமியாயிற்றே இது?)கால் கழுவபப்டும் கழிப்பறையைக் கழுவ பார்ப்பனர்கள் தயாரா?இதேபோல சூத்திரர்களை தஸ்யூக்கள், வேசிமகக்ள், அடிமைகள் என்று வேதங்கள் ஏன் குறிப்பிடுகின்றன என்ற அறிவார்ந்த உண்மைகளையும் ஹரி விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
| 1,297 Views | ***EMail This Post | add this page to del.icio.us


செல்லா அவர்கள் எழுதியது:
நண்பர் சுகுணா திவாகரின் பதிவுக்கு “கல்வெட்டு” வின் ஒரு சூப்பர் பின்னூட்டம்…
கடவுளின் சன்னிதானத்திலேயே (சனாதனம்..?) பெண்களால் குனிந்து நிமிந்து மணியாட்ட முடியாது என்றால் எப்படி அய்யா நாள் பூரா குனிந்து களையெடுக்கவோ,சித்தாள் வேலை செய்யவோ முடியும். என்ன தமசா? சும்மா பொய் சொல்றீங்க.
***
ஹரிஹரன் நீங்கள் சொல்வதுதான் சிறந்தது.
அப்படியே பெண் போலீஸ்,பெண் நீதிபதி,பெண் ஆசிரியர்,பெண் புரோகிராமர்…எல்லாருக்கும் ஓய்வு வாங்க்கிக் கொடுங்கள். இவர்களின் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியால் சட்டம்/ஒழுங்கு/நீதி/கல்வி/ப்ரொகிராம் கோடு எல்லாம் பாதிக்கப்படுகிறது.
கீதையை வெளிநாட்டில் பாடமாக படிக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள். அப்படியே இந்த பிராமணீய மரபுகளையும் படிக்கட்டும்.அந்த ஊர் பெண்களுக்கும் லீவு கிடைக்கும்.அப்படியே வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிய காஞ்சியார் உரையையும் உலகம் பூரா பரப்புங்கள்.
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html
மறு மொழிந்த தேதி 29-Dec-06 at 4:45 am | நிரந்தரச் சுட்டி
செருப்பு அக்பா அவர்கள் எழுதியது:
ஏடா டேய் அம்பி,
மொதல்லியே இந்த இந்து மத உடான்ஸையெல்லாம் நம்மாளுங்க பின்னி பெடலெடுத்துட்டதால திராவிடாஸ் வரமாட்டா.
பழய ஆளுங்க அடிக்கற அடிக்கே இன்னும் எந்திரிக்கி முடியாம இருக்கறதால இந்து மத பிரைவேட் லிட் பார்ப்பனாஸும் வர முடியாம போயிடுத்துடா அம்பி
ஆனாலும் நெறய கேள்விகள், சிந்தனைகள், உண்மைகள்னு பட்டாசு கெளப்பியிருக்கேள்
மறு மொழிந்த தேதி 29-Dec-06 at 5:21 am | நிரந்தரச் சுட்டி
அசுரன் அவர்கள் எழுதியது:
ரொமப் எக்கச்சக்கமா மாட்டிகிட்டாய்ங்க போலருக்கு…. ஒரு பய புள்ளகலையும் காணூம்… செல்லாவையும் … நண்பர் மிதக்கும் வெளியையும் பாராட்ட மிக மிக கடமைப்பட்டுள்ளேன்….
வாழ்த்துக்கள்
அசுரன்
மறு மொழிந்த தேதி 29-Dec-06 at 11:09 am | நிரந்தரச் சுட்டி
அன்புடன் மாசிலா! அவர்கள் எழுதியது:
புகைப்படத்தை பார்த்ததும் கண் களங்க, பதிவை மேற்கொண்டு படிக்க மனத்தைரியமில்லாமல்…. இதற்கு மேலும் படிக்க என்ன இருக்கிறது? எல்லாம் புரிந்துவிட்டது.பொறுமையில் படிப்பேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மகத்தான சேவை செய்துவரும் உங்களைப்போன்றவர்களுக்கு எனது மரியாதைகள்.
அன்புடன் மாசிலா!
மறு மொழிந்த தேதி 29-Dec-06 at 1:38 pm | நிரந்தரச் சுட்டி
Muse அவர்கள் எழுதியது:
Dear iNaiya waadooDi,
We need to have some opinions from some devotional women in this matter rather than pusing the men’s views on them.
Saying so apart, I too opine some of your ideas could be valid.
மறு மொழிந்த தேதி 29-Dec-06 at 1:40 pm | நிரந்தரச் சுட்டி
அன்புடன் மாசிலா! அவர்கள் எழுதியது:
//மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்.//
கருத்தாழமிக்க எழுத்துக்கள்.
அன்புடன் மாசிலா!
மறு மொழிந்த தேதி 29-Dec-06 at 2:58 pm | நிரந்தரச் சுட்டி