துரோகமே உன் மறுபெயர்தான் தமிழக அரசியலோ!

நேற்று என்னை சந்திக்க எங்கள் கிராமத்திலிருந்து ஒரு முதியவர் ( 80+) வந்திருந்தார். அவரிடம் மழை எப்படிங்க ஊர்நலம் எப்படி ( அரவிந்த சாமி இந்திராவில் கேட்ட / பாடிய மாதிரி நிச்சயம் கேட்கவில்லை! ) என்றெல்லாம் விசாரித்து விட்டு அப்படியே தேர்தல் அரசியல் பக்கம் பேச்சைத்தொடர்ந்த போது அவர் ஒரு திடுக்கிடும் கருத்தை முன்வைத்தார் … அப்படியே தருகிறேன் … உங்கள் கருத்தை பின்னூட்டுங்கள்..
- உண்மையான நேர்மையான கவுரமான அரசியல் பெரியார், காமராசர், இராசிசி யோடு போய்விட்டது
- பெரியாரால் வளர்க்கப்பட்ட அண்ணா.. இயக்கமாகவே இருந்தால் போதாது என்று பதவி ஆசையால் உந்தப்பட்டு செய்த துரோகம் தி.மு.க!
- அண்னாவால் வளர்க்கப் பட்டு அவர் மறைவுக்கு பின் நெடுஞ்செழியன் வருவதை விரும்பாமல் எம் ஜி ஆர் செய்த துரோகம் தான் கலைஞர்!
- எம் ஜி ஆர் ஆல் ஆதரிக்கப் பட்டு அவரையே ஓரங்கட்ட முயன்ற துரோகத்தால் உருவானதுதான் அ.தி.மு.க!
- எம் ஜி ஆர் ஆல் ஆதரிக்கப் பட்டு அவரையே டிஸ்மிஸ் செய்ய சொல்லி ராஜிவிடம் சென்ற துரோகத்தை நடத்தியவர்தான் ஜெயலலிதா!
- எம் ஜி ஆர் இறப்புக்குப் பின் தூக்கி எறியப்பட்டவரை (ஜெயலலிதா) அரசியலில் போராட வைத்தவர்களான ( சாத்துரார்க்கும்) திருநாவுக்கரசருக்கு செய்த துரோகத்தால் உருவானதுதான் எம் ஜி ஆர் அ தி மு க.
- கலைஞரால் வளர்க்கப் பட்டு தேர்தலைச் சந்திக்காமலேயே டில்லியில் புகழடைந்த வைகோ செய்த துராகம் தான் ம.தி.மு.க!
- இந்த அரசியல் மாற்றங்கள் அனைத்தும் துரோகங்களாலும், ஈகோ வினாலும், பணத்திற்காகவும் நடந்தனவேயன்றி மக்கள் நலத்திற்காக ஒருநாளும் நடந்ததில்லை!
- ” எனவேதான் சொல்கிறேன் தமிழனைப்போல் அரசியலால் ஏமாந்தஏமாளிகள் உலகத்திலேயே கிடையாது! ” என்று சொல்லி வருந்தினார் … வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்லவேண்டும்… இந்த வாதம்/கோணம் சரியா என்று?
| 936 Views | ***EMail This Post | add this page to del.icio.us


தமிழன் அவர்கள் எழுதியது:
நிஜமாவே இன்னிக்கி தான் இது உங்களுக்கு தெரியுமா?
மறு மொழிந்த தேதி 03-Nov-06 at 12:47 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
i know the issues seperately but our village thaththa put the whole thing in one stroke!
மறு மொழிந்த தேதி 03-Nov-06 at 12:50 pm | நிரந்தரச் சுட்டி
நா.ஜெயசங்கர் அவர்கள் எழுதியது:
//அண்னாவால் வளர்க்கப் பட்டு அவர் மறைவுக்கு பின் நெடுஞ்செழியன் வருவதை விரும்பாமல் எம் ஜி ஆர் செய்த துரோகம் தான் கலைஞர்!//
தன் நன்பன் கருணாநிதி அரியனைக்கு வரவேண்டும் என்று, இரண்டாம் இடத்துக்கு (என்றும்) எம்.ஜி.ஆரால் தள்ளப்பட்டவர் தான் நெடுஞ்செழியன். இதை பலர் கூற கேட்டிருக்கிறேன். அப்புறம் தனியா அவர் தேர்தலில் நின்னு எஸ்.வி.சேகரை(2000 ஓட்டு என்று நினைக்கிறேன்) விட குறைவா வாக்கு (900 வாக்குகள்)வாங்கியப்போது தான் தெரிந்தது நெடுஞ்செழியன் அந்த இரண்டாம் இடத்துக்கு கூட லாயிக்குயில்லை என்று :)))))
மறு மொழிந்த தேதி 03-Nov-06 at 1:29 pm | நிரந்தரச் சுட்டி