பிழைக்கத் தெரியாத பிரதமர் குடும்பத்தினர்
கீழே உள்ள செய்தியைப் படித்தபோது மிகவும் சந்தோசமாக இருந்தது. லோக்கல் போலிஸ் கிட்டேயே, அதுவும் ஒன் வேயில் வந்துவிட்டு நான் யார் தெரியுமா? என்று சவால் விடும் கேவலப் பிறவிகளை தமிழகத்தில் அடிக்கடி பார்த்து நொந்த உள்ளத்திற்கு ஆறுதலாகவும் இருந்தது….
” சமீபத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பிரதமரின் மருமகனும், அவர் பேரன்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் எந்த அறையில் தங்கி சிகிச்சை பெற்றனர் என்பதை பத்திரிகை மற்றும் மீடியாக்களின் நிருபர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மீடியாக்களின் பார்வையில் படாமல் ஒதுங்கி இருந்தனர். எப்படியும் படம் எடுத்து விட வேண்டும் என நினைத்தவர்கள் எல்லாம் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல், டில்லியில் கடந்த ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்த போது, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் விருந்தினர்களுக்கு இடம் அளிக்கும் வகையில், வி.ஐ.பி., கேலரியில் இருந்த இரண்டு பேரை பாதுகாப்பு அதிகாரிகள் எழுப்பி, வேறு இடத்தில் அமரும்படி கேட்டுக் கொண்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் சொன்னவுடன், உரிய டிக்கெட்டுகள் வைத்திருந்தும் அந்த இரண்டு பேரும் எந்தவிதமான முணுமுணுப்பும் இல்லாமல் வேறு இடத்தில் எழுந்துபோய் அமர்ந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல பிரதமர் மன்மோகனின் மருமகன் விஜய்டேங்காவும், அவரின் மகனும் தான்.
“காங்கிரஸ் கட்சியில் சோனியா குடும்பத்தை சேர்ந்த யாரையாவது இப்படி பாதுகாப்பு அதிகாரிகள் எழுந்திருக்க வைத்திருந்தால் பல தலைகள் உருண்டிருக்கும். பாவம் பிரதமரின் உறவினர்கள்’ என அப்போது கூறினார் பீகார் தலைவர் ஒருவர். அதே தலைவரை இப்போது சிலர் தொடர்பு கொண்டு கேட்ட போது, “பாவம் பிழைக்கத் தெரியாத பிரதமரின் உறவினர்கள்’ என பரிதாபப்பட்டார். பிரதமர் குடும்பத்தினரின் இந்த எளிமையை மற்றவர்களும் பின்பற்றுவார்களா? ”
Thanks to Dinamalar
| 2,359 Views | ***EMail This Post | add this page to del.icio.us


மாயவரத்தான் அவர்கள் எழுதியது:
ஹூம்..கருணாநிதி, ராமதாசுடன் கூட்டணி வைத்து என்ன பிரயோசனம். இதையெல்லாம் கத்துக் கொள்ளவில்லையே?
மறு மொழிந்த தேதி 29-Oct-06 at 10:02 am | நிரந்தரச் சுட்டி
narmu அவர்கள் எழுதியது:
romba aacharyama irukku.analum romba nallavangala irukkanga.
மறு மொழிந்த தேதி 30-Jan-07 at 5:34 pm | நிரந்தரச் சுட்டி