காமத்திலிருந்து கடவுளுக்கு - 01


osho_man_women.jpg

நேற்று இரு வலைப்பூ நண்பர்கள் எனது ஒரு மிகச் சாதாரமான பதிவின் நோக்கத்தை சுலபமாகஎடுத்து கொள்ளத்தெரியாமல் நொந்துகொண்டு பின்னூட்டத்தால் தாக்கி விட்டனர்… எனக்கு இதெல்லாம் புதியனவே அல்ல! இவர்கள்தான் இந்த உலகைத் திருத்த வந்த தேவ தூதர்கள், தமிழ் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை…

மேலும் இணைய ஊடகம் பற்றிய அவர்களின் அறியாமையும், சகிப்புத்தன்மை இன்மையும், நகைச்சுவைத்தன்மை வறட்ச்சியும் எனக்கு கொஞ்சம் புதிதாகப் பட்டது. நான் ஒரு நாடோடி… நல்லவை கெட்டவை என்பதெல்லாம் சார்பு சார்ந்த விடயம். செயிக்கப்போவதென்னமோ நியட்சே சொன்னமாதிரி பலம் தான் இந்த போட்டி உலகத்தில்! காமம் என்ற உடனேயே அது ஏதோ அருவருக்கத்தக்கது என்று வாந்தியெடுப்பது எனக்கு இணயத்தில் அதிசயமாகப் படுகிறது… ஒரு ஓஷோ சன்னியாசி என்ற முறையில்…

ஓஷோ சொல்கிறார் … ” நான் உங்களுக்கு தியாகம் செய்தலையோ, நோன்பு இருத்தலையோ, துறவரத்தையோ போதிக்க வரவில்லை. நான் வாழ்க்கையின் கொண்டாட்டங்களை போதிக்கிறேன். அதுதான் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித குலம் இழந்த ஒன்று. மனித குலத்தால் காமத்தை ஒரு விளையாட்டுத் தன்மையுடன் புரிந்து கொள்ள முடியாதது வருந்த வேண்டிய ஒன்று. விளையாட்டுத் தன்மையுடன் புரிந்து கொள்ள முடியாதவர்களால் காமத்தை ஒரு தியான அனுபவமாக நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது…. இயலாது! ”

காமம் பின்பு தொடரும் ….

( மேலே உள்ள படத்தைப் பார்த்து சிரிக்கலாம்! எனது ஓஷொ செருமானிய நண்பர் உருவாக்கிய நவீன சிற்பம் பலரையும் சிரிப்புக்குள்ளாக்கிய ஒன்று! தேவை சிறிது நகைச்சுவைத் தன்மை!)

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 3,674 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (2) left to “காமத்திலிருந்து கடவுளுக்கு - 01”

  1. BadNewsIndia அவர்கள் எழுதியது:

    //மேலும் இணைய ஊடகம் பற்றிய அவர்களின் அறியாமையும், சகிப்புத்தன்மை இன்மையும், நகைச்சுவைத்தன்மை வறட்ச்சியும் எனக்கு கொஞ்சம் புதிதாகப் பட்டது.//

    Sorry, நொந்து கொண்டு தாக்கியதர்க்கு. இனணயமும் தெரியும், அதில் காமம் சார்ந்த தொழில் தான் முதலிடத்தில் இருக்கிறது என்பதும் தெரியும்.
    இனணயத்தால், தினம் தினம் குழந்தைகளும், சிறுமிகளும் அவர் குடும்பங்களும் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல.

    நீங்கள் பதிந்த ‘புகைப்படம்’ சூதுவாதற்ற அழகு புகைப்படமே. இல்லேங்கல.

    நம்ம ஆளுங்கள்ள பலருக்கு, அதில இருக்கர கலையும் தெரியாது, அதில் இருக்கர நகைச்சுவையும் தெரியாது.
    அது தவிர, பள்ளி குழந்தைகளும், பெண்களும் வந்து போகிர இடத்தில் தெரிந்தே இப்படி போட வேண்டாம் என்பதே என் கருத்து.

    “என்ன அப்பா இந்த மாதிரி படம் பாக்கராறுனு குழந்தையும் நினைக்கும். இதை எதிர்பாராத தகப்பனும் அசடு வழிய வேண்டியிருக்கும்”

    ;)

  2. சங்கர் நாராயண் அவர்கள் எழுதியது:

    நீங்கள் சொல்வது சரிதான்.எப் டிவியும், தமிழ் சினிமா பாடல்களில் வ்ரும் நடன அசைவுகளை பார்க்கும் நம் குழந்தைகளுக்கு செல்லாவின் படம் ஓன்றும் ஆபாசமேயில்லை.எதையும் மறைத்து, மறைத்து வைப்பதால் தான் அதன் மேல் ஆர்வம் வருகிறது. அதேபோல் நம் காலத்தில் தவறு என்றததை இப்போது சரி என்று ஆகிவிட்டது, என் அப்பா என் தாத்தாவிடம் எதிரில் நின்று பேசக்கூட தயக்கினார். ஆனால் நான் என் அப்பாவிடம் பேசாத டாபிக் கிடையாது. காலம் எல்லாவற்றையும் மாற்றும். நாம் தான் அதனோடு மாற கற்க வேண்டும்
    சங்கர் நாராயண்
    www.shortfilmindia.com
    www.classiindia.com

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

காமத்திலிருந்து கடவுளுக்கு - 01

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1227220947')