கீறல் விழுந்த பானையும் சீன விவசாயியும் - குறுங்கதை


ஒரு சீன தேசத்து விவசாயி தினமும் ஆற்றிலிருந்து தனது குடிசைக்கு இரண்டு மண்பாண்டங்களை chinese farmerகாவடி போலக் குச்சியில் கட்டி நீர் கொண்டுவருவதை தின வழக்கமாகக் கொண்டிருந்தான். சில நாட்களில் அவனது வலது பானையில் ஒரு சிறிய கீறல்/விரிசல் உருவாகி விட்டது. அதனால் அந்த வலது பானையில் வழியெஙகும் நீர் சொட்டியது போக பாதிப்பானை நீர்தான் விவசாயியின் குடிசையை அடையும். இதனால் அவனது இடது பானைக்கு மிகவும் தலைக்கனம் பிடித்துவிட்டது…. அதனால் அதுஎப்பொழுதும் வலது பானையைக் கிண்டல் செய்து வந்தது.. “நீ பாதிதான் உபயோகப்படுகிறாய்”என்று. வலது பானை மனம் நொந்தது … ஆனாலும் அந்த விவசாயியோ அதை மாற்றுவதாகத் தெரியவில்லை.

ஒரு நாள் மிகவும் மனம் நொந்த அந்த வலது பானை விவசாயியிடம் முதன்முறையாகப் பேசியது… ” விவசாயியே.. என் உடம்பில் சிறுவிரிசல் இருப்பதை நீ அறிவாய்.. அதனால் உனக்கு பாதி நீர்தான் கிடைக்கிறது. என்னால் உனது உழைப்பு வீணாகிறது தானே.. பின்பு ஏன்என்னை இன்னும் தூக்கி எறியாமல் இருக்கிறாய்”என்று வருத்ததுடன் கேட்டது.

அதற்கு அந்த விவசாயி கூறினான்.. “எனது அன்பு பானையே, உன்னிடம் குறை இருப்பது நான் அறிந்ததுதான் அனால் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. காரணம் இந்தப்பாதையை நன்றாக பார்… செல்லும் போது வலதுபுறம் முழுவதும் பூக்கள் பூத்துக் குழுங்குவதை பார்.எல்லாம் உன்னால் தான்!.. நீ விரிசல் விழுந்து விட்டதால் உன்னைத் தூக்கி எறிய மனமில்லாமல் நீ கசியவிடும் வலது புறத்தில் பூச்செடிகளின் விதைகளத் தூவியிருந்தேன். அவை உன்னிடம் இருந்து கசியும் நீரால் இன்று நன்கு வளர்ந்து எனக்கும் கடவுளுக்கும் தினம்தோறும் அழகிய பூக்களை தருகின்றன.எனவே நீயும் மிகவும் கொடுத்து வைத்தவன் தான், உபயோகமானவன் தான் “. இதைக்கேட்டதும் இதுவரை இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி வாழ்க்கையை நேசித்து மகிழ ஆரம்பித்தது அந்த வலது பானை!

இந்தக்கதையை படித்து சிந்தனையில் ஆழ்ந்தேன். நமது விரிசல்களைக் கூட சரியாகப் பயன்படுத்தினால் இங்கும் பூக்கள் பூக்கும்தானே!

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 1,736 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (5) left to “கீறல் விழுந்த பானையும் சீன விவசாயியும் - குறுங்கதை”

  1. pandian அவர்கள் எழுதியது:

    Chella,

    Thanks for the motivational story. I read it in the morning, may be, the whole day will be better for me out of this. Keep it up.

  2. nagoreismail அவர்கள் எழுதியது:

    மிகவும் அருமையான பதிவு.
    உங்கள் வழியெங்கும் மட்டும் அல்ல வாழ்வெங்கும் கூட பூக்கள் பூத்து குலுங்க வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.
    நாகூர் இஸ்மாயில்

  3. Bala Subra அவர்கள் எழுதியது:

    நிறைகுடம் தளும்பும் : )

  4. Ma Sivakumar அவர்கள் எழுதியது:

    செல்லா,

    நல்ல கதை. இப்போதான் நீங்க ஜென் வழியில் இறங்கியிருக்கிறீர்கள் :-)

    அன்புடன்,

    மா சிவகுமார்

  5. செல்லா அவர்கள் எழுதியது:

    நாடோடிகள் வழிகளை நம்பி வாழ்வதில்லை! புதுவழிகள் எப்போதும் வழிகளற்ற நிலங்களிலேயே உருவாக்கப்படும் தானே!

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

கீறல் விழுந்த பானையும் சீன விவசாயியும் - குறுங்கதை

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1227216547')