உலகை மாற்றிய மூன்று யூதர்கள் !
ஓஷோவின் புத்தகம் ஒன்றைப்படித்தபொழுது கடந்த இரண்டு நூற்றாண்டில் உலகின் போக்கையே மாற்றியவர்கள் என்று 3 யூதர்களைப்பற்றி சொல்கிறார். அவர்கள் தான்
1.காரல் மார்க்ஸ்: உலகில் பெரும்பகுதியைச் சிவப்பாக்கிய கம்யூனிசம் என்னும் நாளைய பொருளாதார அறிவியலை உருவாக்கியவர். மனிதன் விலங்குகள் போல் போட்டியிட்டிக் கொண்டே வாழ்வது மாறும் என்ற அற்புதக் கொள்கைகளை உருவாக்கியளித்தவர்.
என்னைப் பொருத்தவரை ரஷ்யாவில் தோற்றுவிட்டது என்பதெல்லாம் பைத்தியக்காரத்தனமான வாதம். மனிதன் தெருநாய்களைப்போல தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு லாபம் என்னும் சாத்வீகச்சுரண்டலை விட்டு பொதுநலம் நோக்கி முன்னேறும் நாள் நிச்சயம் வரும்.
இப்பொழுது சில அரைவேக்காட்டு எழுத்தாளர்கள் கம்யூனிசத்தின் அடிப்படையே தவறு (தேவைக்கேற்ற ஊதியம், திறமைக்கேற்ற வேலை) என்றெல்லாம் எழுதினாலும் சமூக மாற்றங்களான ஒப்பன் சோர்ஸ் இயக்கம் … லாபமீட்டாமல் போட்டிகள் இல்லாமல் ஓர் மிகச்சிறந்த [மென்] பொருள்களை மனித இனம் உருவாக்கவில்லையா? … லினக்ஸ், அப்பாச்சி, PHP, MySQL, PostgreSQL, WikiPedia… மேலும் வார்ட்பிரஸ் போன்று ஆயிரக்கணக்கான அப்ளிகேசன்கள்..
இவையனைத்தும் இன்னும் இந்த மாமேதையின் தத்துவம் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு சாட்சிகள்… இந்த மாபெறும் தத்துவத்தை ஒரு உருப்படியான மாற்றுத்துணிகூட இல்லாதபோதும் நண்பனின் (மார்க்ஸ் மற்றும்எங்கெல்ஸ்’ன் நட்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை) உதவியுடன் எழுதினான் இந்த மானுடக்காதலன், அறிஞன், சிந்தனையாளன்.எப்படி சார்லஸ் டார்வினின் பரிணாம வாதமானது அனைத்து மதங்களின் ஆக்கிரமப்பை அழித்ததோ அது போலவே மார்க்ஸ் அவர்களின் பொருளாதார பரிணாம வாதமும் நிச்சயம் வெற்றிபெறும்… மனிதன் தனது விலங்கின எச்சக் குணங்களை மீறி பரிணமிக்கும் போது …
அடுத்த யூதர்.. சிங்மண்ஃட் ஃப்ராய்ஃட் பற்றி நாளைஎழுதுகிறேன் - அன்புடன் செல்லா.
| 2,179 Views | ***EMail This Post | add this page to del.icio.us


SP.VR.Subbiah அவர்கள் எழுதியது:
It is good posting my dear friend
மறு மொழிந்த தேதி 06-Oct-06 at 4:13 am | நிரந்தரச் சுட்டி
குமரன் எண்ணம் அவர்கள் எழுதியது:
ஒபன் சோர்ஸைக் கம்புனிசத்துடன் இணைத்து எழுதி இருக்கிறீர்களா? வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.
மறு மொழிந்த தேதி 06-Oct-06 at 6:53 am | நிரந்தரச் சுட்டி
dharumi அவர்கள் எழுதியது:
ரொம்பவே optimistic ஆக - மனிதன் தனது விலங்கின எச்சக் குணங்களை மீறி பரிணமிப்பான் … - எண்ணம் கொண்டுள்ளீர்கள். நடந்தால் நல்லதே…
மறு மொழிந்த தேதி 06-Oct-06 at 8:13 am | நிரந்தரச் சுட்டி
அசுரன் அவர்கள் எழுதியது:
செல்லா,
திருக்குறளைப் போல சிறிய ஆனால் வலுவான ஒரு பதிவு.
வாழ்த்துக்கள். இது போல தொடர்ந்து எழுதுங்கள். நம்மைப் போலவே மேலும் சில நண்பர்கள் எழுதத் தொடங்கிவிட்டனர்.
வலைப்பூ உலக சூழலை சிவக்க செய்வோம்…. :-))
//அவர்களின் பொருளாதார பரிணாம வாதமும் நிச்சயம் வெற்றிபெறும்//
சரியான விசயம். இதை இன்னும் சரியாக சமூக பரிணாம வாதம் என்று கூறலாம்தானே?
மார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி, சமூகத்தின் இயங்கு விசையாய் உற்பத்தி முறை இருந்ததை பகுத்துணர்ந்தார். ஆகவே பொருளாதாரத்தையும் கூட வியாக்கியானம் செய்ய வேண்டியதாகியது.
ரஸ்யாவில் தோற்றது கம்யுனிசம் அல்ல. அங்கும் தோற்றது முதலாளித்துவம்தான்.
அதாவது முதலாளித்துவ பொருளாதார திட்டங்களை செயல் படுத்தத் தொடங்கிய பிற்ப்பாடுதான் அந்த சமூகம் வீழ்ச்சியுறத் துவங்கியது. இதை எத்தனை முறை சொன்னாலும் சிலர் வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறார்கள்
மேலும் தனிமனிதர்கள் வரலாறை உருவாக்குவதில்லை. உண்மையில் தனி மனிதர்கள் ஒரு காலகட்டத்தின் செய்தியை உறக்க சொல்லும் Messengers ஆகத்தான் உள்ளனர். மார்கஸும் கூட அப்படித்தான். மார்க்ஸ் என்ற மனிதர் இல்லாவிட்டாலும் சோசலிச சமூகமும், கம்யுனிச சமூகமும் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் வந்தே தீரும்.
அசுரன்
மறு மொழிந்த தேதி 06-Oct-06 at 8:15 am | நிரந்தரச் சுட்டி
சீனு அவர்கள் எழுதியது:
இன்னும் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மறு மொழிந்த தேதி 09-Jan-07 at 5:53 am | நிரந்தரச் சுட்டி
Muthiah அவர்கள் எழுதியது:
Comunisum gone to grave yards around the world, no more,around the world comunists insists comunisum for thier own benifits.
மறு மொழிந்த தேதி 25-Jan-07 at 10:43 am | நிரந்தரச் சுட்டி
narmu அவர்கள் எழுதியது:
well said. keep it up
மறு மொழிந்த தேதி 30-Jan-07 at 5:29 pm | நிரந்தரச் சுட்டி
பாலன் அவர்கள் எழுதியது:
நாளைய பொருளாதார அறிவியலை உருவாக்கியவர்.
the above comment was true indeed.
Marx - was a visionary, he with a true friend, Engels, propelled the communist movement.
tomorrow certainly belongs to the working class, the time may take and to fix a deadline to capitalism not possible.
Your first jew never claimed himself tobe a jew, the philosophy which he penned will make him the common man’s MAN.
Keep doing such articles.
Balan
மறு மொழிந்த தேதி 24-Feb-07 at 8:08 am | நிரந்தரச் சுட்டி