என்னைப் பற்றி
என்னைப் பற்றி
நல்வரவு! என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் ஒரு இணய நாடோடி… எங்காவது ஓடிக்கொண்டே இருப்பவன். இணையம் அனைவரையும் சென்று அடையவேண்டும் என்பதற்காக கடந்த 1999 முதல் பல்வேறு முயற்சிகளை இணையம், மின்னஞ்சல் குழுமங்கள், வலைப் பூக்கள், விரிவுரை மூலமாக ஓயாமல் செய்து கொண்டு வருகிறேன்.
“ஓசை ” மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை வாரம் இரு முறை சென்றடைகிறேன். இணையத்தில்எழுத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல் ஒலி மற்றும் ஒளியும் உலாவரவேண்டும், மற்றும்எழுதப் படிக்க இயலாத எம் தமிழர்களும் இணையம் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அவாவினால் இந்த ஓசை நிகழ்ச்சியை ஆரம்பித்து, தமிழ் இணையம் மூலம் தொகுத்து வழங்கி வருகிறேன்.
என்னை உருவாக்கியவர்கள்
ஒரு மனிதனை உருவாக்குவதில் பலருக்கும் பங்கு உண்டு. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் புத்தகங்கள் என்று பலர்… அவர்களில் சிலர்
- தமிழூட்டி வளர்த்த என் தந்தை (நினைவில் வாழும்) திரு.சின்னதுரை சிவசாமி கிருட்டிணன்
என் தமிழாசான் கீரனூர் சுந்தர வடிவனார்- வான்புகழ் வள்ளுவனார்
- தொல்காப்பியப் பெருந்தகை
- அறிஞர் அண்ணா
- பட்டுக்கோட்டையார்
- கவிஞர் கண்ணதாசன்
- செயகாந்தன்
- கவிப்பேரரசு வைரமுத்து
- நகைச்சுவை தென்றல் ஆசான் லியோனி
மாக்சிம் கார்க்கி- கியூபச் சிங்கங்கள் சேகுவாரா, பிடல் & ரால்
- பாட்ரிசு லுமும்பா
- பாப்லோ நெரூடா
- ஓஷோ
… தொடரும்
என் விருப்பங்கள் / பொழுது போக்கு
புகைப்படக் கலை (கருப்பு வெள்ளை, பலநிறம் & மின்னணு )- ஓவியம் (தூரிகை, கணிணி)
- இசை ( தமிழிசை, மேற்கத்திய இசை, பழங்குடி இசை… )
- தத்துவம் ( ஓஷோ)
- புத்தகம் வாசித்தல் ( அரசியல்,இலக்கியம், அறிவியல், வரலாறு, சமூகவியல், மேலாண்மையியல்)
… தொடரும்
( இந்த வலைமனயில் உள்ள பெரும்பான்மையான புகைப்படங்கள் எனது SMART MOBILE மூலம் எடுக்கப்பட்டது. என் அனுமதியோடு நீங்கள் இவற்றை நகல் எடுத்து கொள்ளலாம்! )


